மேலும் செய்திகள்
தெரு நாய்கள் தொல்லை பொதுமக்கள் அச்சம்
30-Sep-2025
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் மெயின் ரோடு மற்றும் வாடிவாசல் பேரூராட்சி அலுவலக ரோட்டில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவதால் பொதுமக்கள் அச்சத்துடனே நடமாடுகின்றனர். கூட்டமாக திரியும் நாய்கள் திடீரென ரோட்டின் குறுக்கே ஓடுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். இவற்றின் தொல்லை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் ரோட்டில் நடமாடவே அச்சமடைந்துள்ளனர். பிற பகுதிகளில் பிடித்து வரப்படும் நாய்களை, இங்குள்ள குப்பைக் கிடங்கு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் விட்டுச் செல்கின்றனர். அவை உணவுக்காக நகருக்குள் வரும்போது நாய்களுக்குள் சண்டை ஏற்பட்டு வாகனங்களில் விழுந்து காயமடைகின்றன. பாசன கால்வாய் கரைகள், குப்பைக் கிடங்குகளில் கொட்டப்படும் கோழிக் கழிவுகளை உண்பதால், உடல் நிலை பாதித்து நடமாடும் நோய் பரப்பியாக மாறுகின்றன. நாய்களை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
30-Sep-2025