உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா

கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா

விக்ரமங்கலம்: விக்கிரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா அக்.15ல் துவங்கியது.அம்மன் பெட்டி, கரகம் எடுத்து கோயில் வந்தனர். ஆயிரம் கண் பானை, மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. நேற்று கோயில் முன் பொங்கல் வைத்தும், சக்தி கிடா வெட்டியும் வழிபாடு செய்தனர். காப்புக் கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இன்று (அக்.,17) சக்தி கரகம் எடுத்தல், ஊர்வலமாக சென்று முளைப்பாரி கரைத்தல், வெட்டி எடுப்பு, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி