உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தொழிலாளி உடலுடன் உறவினர்கள் போராட்டம்

 தொழிலாளி உடலுடன் உறவினர்கள் போராட்டம்

அலங்காநல்லுார்: மதுரை கோவில்பாப்பாகுடியை சேர்ந்தவர் கண்ணன் 50. அப்பகுதியில் உள்ள தனியார் ஆடை தொழிற்சாலையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த இவர், நேற்று மாலை பணியின் போது மயங்கி விழுந்தார். சக தொழிலாளர்களை அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். கண்ணன் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தொழிற்சாலைக்குள் 5 மணிநேரத்திற்கும் மேலாக கண்ணன் உடலுடன் உறவினர்கள், கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிவாரணம் வழங்க கோரி முழக்கமிட்டனர். டி.எஸ்.பி.,ஆனந்த்ராஜ் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு இல்லை. கம்யூ., கட்சியினரும் கிராமத்தினருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை