மேலும் செய்திகள்
மாவட்ட சிலம்ப போட்டியில் சாதனை
23-Jan-2025
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் சைபர் ஜக்குருதி குழு, நுகர்வோர் பாதுகாப்பு குழு சார்பில் இணைய வழி குற்றங்களும் அதற்கான தீர்வுகளும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இன்ஸ்பெக்டர் பிரியா, பாத்திமா கல்லுாரி பேராசிரியர் மகேஸ்வரி பேசினர். பேராசிரியர்கள் பாலசத்தியா, சாய் மோகனா ஒருங்கிணைத்தனர். மாநில போட்டிக்கு தேர்வு
சோழவந்தான்: பள்ளி கல்வித்துறை சார்பில் மதுரை மாவட்ட சிலம்பம் விளையாட்டுப் போட்டிகள் ஜெயராஜ் நாடார் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவி தீபிகா 17 வயது பிரிவில் முதலிடம் பிடித்தார். மயிலாடுதுறையில் நடக்க உள்ள மாநில போட்டிக்கு தகுதி பெற்றார். வெற்றி பெற்ற மாணவி, பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியரை தலைமை ஆசிரியர் தீபா, உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர். சர்வதேச கல்வி நாள் கருத்தரங்கு
சோழவந்தான்: திருவேடகம் விவேகானந்த கல்லுாரியில் இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தமிழ்நாடு வேளாண் சுற்றுலாக் கழகம் சார்பில் சர்வதேச கல்வி நாள் விழா கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்தார். கல்லுாரி செயலர் சுவாமி வேதானந்த, குலபதி அத்யாத்மானந்த, சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் ரிஜின் முன்னிலை வகித்தனர். வேளாண் நிர்வாகி அருண் ஜேம்ஸ் எட்வின் தம்பு, சுற்றுச்சூழல் எழுத்தாளர், விஞ்ஞானி பாமயன் பேசினர். முன்னதாக மாரத்தான் ஓட்டம், வினாடி வினா போட்டி நடந்தது. வேளாண் உறுப்பினர் மாரியப்பன் சான்றிதழ் வழங்கினார். சங்க மாவட்ட அமைப்பாளர் சதீஷ்பாபு மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
23-Jan-2025