உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி கல்லுாரி செய்திகள்

பள்ளி கல்லுாரி செய்திகள்

முப்பெரும் விழா

மதுரை: செந்தமிழ்க் கல்லுாரியில் ஆண்டுவிழா, விளையாட்டு விழா, நாட்டுநலப் பணித்திட்டம் நிறைவு விழா நான்காம் தமிழ்ச் சங்க செயலாளர் மாரியப்பமுரளி தலைமையில் நடந்தது. முதல்வர் சாந்திதேவி ஆண்டறிக்கை வாசித்தார். தியாகராஜர் கல்லுாரி முதல்வர் பாண்டியராஜா சிறப்புரையாற்றினார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. துணை முதல்வர் சுப்புலட்சுமி வரவேற்றார். உதவிப் பேராசிரியை கோகிலா தொகுத்து வழங்கினார். உதவி பேராசிரியை செல்வத்தரசி நன்றி கூறினார்.

கல்லுாரி நாள் விழா

மதுரை: யாதவர் கல்லுாரி 56 வது ஆண்டு கல்லுாரி நாள், விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது. முதல்வர் ராஜூ, உடற்கல்வி இயக்குநர் நெல்சன் எட்வர்டு ஞான ஜோயல் ஆண்டறிக்கை சமர்ப்பித்தனர். செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். கே.பி.எஸ். கண்ணன் சிறப்புரையாற்றினார். சோலைமலை பிச்சை, கல்லுாரி தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் செந்தில், இணை செயலாளர் முத்துகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இயக்குநர் ராஜகோபால் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை