உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோகோ போட்டியில் வென்ற பள்ளிகள்

கோகோ போட்டியில் வென்ற பள்ளிகள்

திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் திருநகர் குறு வட்ட அளவிலான மாணவர்களுக்கான கோகோ போட்டிகள் நடந்தன. முதல்வர் ராமசுப்பையா துவக்கி வைத்தார். நாக் அவுட் முறையில் நடந்த போட்டிகளில் 9 பள்ளிகள் பங்கேற்றன. 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் புனித ஜான்ஸ் பள்ளி முதலிடம், ஜெயராஜ் நாடார் ஆண்கள் பள்ளி 2ம் இடம் வென்றன. 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஜெயராஜ் நாடார் பள்ளி முதலிடம், முத்துத்தேவர் முக்குலத்தோர் பள்ளி 2ம் இடம் வென்றன. 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் புனித ஜான் மெட்ரிக் பள்ளி முதலிடம், ஜெயராஜ் நாடார் பள்ளி 2ம் இடம் வென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ