மேலும் செய்திகள்
கலெக்டர் அலுவலக சுவற்றில் கட்சி போஸ்டர்கள்
02-Mar-2026
மதுரை கலெக்டர் அலுவலகத்தின் புதிய கட்டடத்தின் தரைத்தளத்தில் தேர்தல் தொடர்பான அனுமதிகளைப் பெற ஒற்றைச்சாளர முறையில் (சிங்கிள் விண்டோ சிஸ்டம்) அனுமதி வழங்க பிரத்யேக அறை துவக்கப்பட்டுள்ளது. இங்கு அரசியல் கட்சியினர் தங்கள் பிரசாரம் தொடர்பாகவோ, வாகனங்கள் போக்குவரத்து, பொதுக் கூட்டம் உட்பட அனைத்து தேர்தல் நடவடிக்கைகளுக்கும் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும். இதற்காக கணினிகளுடன் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசியல் கட்சி நிர்வாகிகள் தங்களுக்கான அனுமதியை இவர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். இணையத்தில் தேர்தல் செயலியான 'சுவிதா ஆப்' மூலமும் விண்ணப்பிக்கலாம். இந்த அலுவலர்கள் அவ்விண்ணப்பத்தை போலீஸ், வருவாய் உட்பட பல்வேறு துறைகளுக்கும் அனுப்பி அங்கு தடையின்மை சான்று பெற்று தெரிவிப்பர். அதன்பின் கலெக்டர் அலுவலக அனுமதி பெறலாம்.
02-Mar-2026