தீ விபத்தால் எழுந்த புகை
சிலைமான்: மதுரை ஐராவதநல்லூரைச் சேர்ந்தவர் சக்திவேல், 35. சிலைமான் - சக்கிமங்கலம் பாலம் அருகே இவருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலை உள்ளது. நேற்று மதியம் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. அனுப்பானடி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். முதற்கட்ட விசாரணையில், மின் கம்பி அறுந்து விழுந்ததில் பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சேதமானது. சிலைமான் போலீசார் விசாரிக்கின்றனர்.