மேலும் செய்திகள்
பல்கலை வாலிபால் போட்டி
17-Sep-2025
பெருங்குடி: மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையே நடந்த பளுதுாக்கும் போட்டிகளில் சரஸ்வதி நாராயணன் கல்லுாரி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. சாத்துார் எஸ்.என்.ஆர்.எம்., கல்லுாரியில் நடந்த போட்டிகளில் மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரியைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட பளுதுாக்கும் வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் சரஸ்வதி நாராயணன் கல்லுாரி வெங்கடேஷ் 65 கிலோ எடைப் பிரிவில் தங்கம், 110 கிலோ எடைப் பிரிவில் திருமுருகன் தங்கம், 66 கிலோ எடைப் பிரிவில் ராஜ்குமார் வெள்ளி, 98 கிலோ பிரிவில் அஐய்குமார் வெள்ளி பெற்றனர். 71 கிலோ எடை பிரிவில் சுபாஸ் வெள்ளி, 88 கிலோ எடைப்பிரிவில் பிரகாஸ்ராஜ் வெண்கலம், 71 கிலோ எடை பிரிவில் உமாநாத் வெண்கலம் வென்றனர். மொத்தம் 7 பதக்கங்கள் பெற்ற சரசுவதி நாராயணன் கல்லுாரி வீரர்கள் மதுரை காமராஜ் பல்கலை ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். சாம்பியன் பட்டம் வென்ற வீரர்களை கல்லுாரி முதல்வர் சந்திரன், துணை முதல்வர் கணேசன், உடற்கல்வி இயக்குனர் யுவராஜ், பயிற்சியாளர்கள் ஆனந்தகுமார், கார்த்திக், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர்
17-Sep-2025