மாநில ஹாக்கி: அரசு பள்ளி தேர்வு
மதுரை : திருமங்கலம் கப்பலுார் அரசு கள்ளர் பள்ளி மாணவிகள் வருவாய் மாவட்டஹாக்கி போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து மாநில போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.வாடிப்பட்டி தாய் மெட்ரிக் பள்ளி மைதானத்தில் நடந்த போட்டியில் வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றனர். இதையடுத்து டிச.5 ல் திருச்சியில் நடக்க உள்ள மாநில ஹாக்கி போட்டியில் பங்கேற்க உள்ளனர்.மாணவியரை கள்ளர் சீரமைப்புத் துறை இணை இயக்குனர் முனியசாமி, முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, உடற்கல்வி ஆய்வாளர் வினோத், பள்ளித் தலைமை ஆசிரியர் பிரபாகர், பயிற்சியாளர் நடராஜன், உடற்கல்வி ஆசிரியர் நல்லமாயன் உட்பட பலர் பாராட்டினர்.