உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாநில பல்திறன் போட்டி: நேசமணி கல்லுாரி சாம்பியன்

மாநில பல்திறன் போட்டி: நேசமணி கல்லுாரி சாம்பியன்

திருப்பரங்குன்றம் : மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் நடந்த மாநில பல்திறன் போட்டிகளில் மார்த்தாண்டம் நேசமணி கல்லுாரி அணியினர் சாம்பியன் பட்டம் வென்றனர். அனைத்து கல்லுாரி மாணவர்களுக்கான மாநில பல்திறன் போட்டிகள் 2 நாட்கள் நடந்தன. பேச்சு, கட்டுரை, நடனம், கவிதை, உணவுப் பொருட்கள் தயாரித்தல், கழிவுப் பொருட்களில் கலைநயம் உள்பட 25 போட்டிகளில் தமிழகம் முழுவதிலும் இருந்து 1500க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். கல்லுாரிச் செயலாளர் குமரேஷ் துவக்கி வைத்தார். அதிக புள்ளிகள் பெற்ற மார்த்தாண்டம் நேசமணி மெமோரியல் கிறிஸ்தவ கல்லுாரி அணியினர் சாம்பியன் பட்டம் பெற்றனர். மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி 2 ம் பரிசு, தியாகராஜர் கலைக் கல்லுாரி 3 ம் பரிசு வென்றனர். பரிசளிப்பு விழாவை சவுராஷ்டிரா கல்லுாரி முதல்வர் ஸ்ரீனிவாசன் துவக்கி வைத்தார். பேராசிரியர் கலைவாணி வரவேற்றார். கல்லுாரிச் செயலாளர் குமரேஷ், பொருளாளர் பாஸ்கர் நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் பரிசு வழங்கினர். முன்னாள் மாணவர் சங்க பொருளாளர் விஷ்ணுகுமார், ஸ்டார் பிரண்ட்ஸ் அறக்கட்டளை நிறுவனர் குருசாமி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை