உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முதல்வர் கோப்பைக்கான மாநில நீச்சல் போட்டி

முதல்வர் கோப்பைக்கான மாநில நீச்சல் போட்டி

மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பைக்கான பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான மாநில அளவிலான நீச்சல் போட்டி சென்னையில் நடந்தது. பள்ளிகளுக்கான பிரிவில் மதுரை லீ சாட்லியர் பள்ளி மாணவி ரோஷினி 100 மீட்டர், 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் முதலிடம் பெற்றார். யாதவர் கல்லுாரி மாணவர்கள் குணபாலன் 100 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் 3ம் இடம், குருபிரசாத் 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக்கில் 3ம் இடம் பெற்றனர். ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மாநில நீச்சல் சங்க துணைத்தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், மாவட்ட செயலாளர் கண்ணன் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !