உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ராணுவ கனவு பறிபோனதால் மாணவர் தற்கொலை

ராணுவ கனவு பறிபோனதால் மாணவர் தற்கொலை

மதுரை: மதுரையில் ராணுவத்தில் சேர விருப்பப்பட்டு அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த 17 வயது கல்லுாரி மாணவர், கையில் பச்சைக் குத்தியிருந்ததால் நிராகரிக்கப்பட்டார். இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார். மதுரை அருள்தாஸ்புரம் பாலமுருகனின் 17 வயது மகன் தனியார் கல்லுாரியின் முதலாமாண்டு மாணவர். சிறு வயதிலேயே ராணுவத்தில் சேர வேண்டும் என விரும்பி, அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். சமீபத்தில் ஈரோட்டில் ராணுவத்திற்கான ஆள் தேர்வு நடந்தது. இதில் பங்கேற்ற நிலையில் கையில் பச்சை குத்தியிருந்ததால் நிராகரிக்கப்பட்டார். இதனால் விரக்தி அடைந்து ஊருக்கு திரும்பியவர், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ