உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாளை மாணவர் குறைதீர் கூட்டம்

நாளை மாணவர் குறைதீர் கூட்டம்

மதுரை: இந்தாண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டம், கல்லுாரி கனவு திட்டங்களின் கீழ் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நாளை(ஜூன் 5) குறைதீர் கூட்டம் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.உயர்கல்வி பயிலுதல், துணைத் தேர்வு தொடர்பாக மாணவர், பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், உயர்கல்வியில் சேர்த்தல், கல்வி உதவித்தொகைக்கு வழிகாட்டுதல், அவர்களின் பிற கோரிக்கைகள் குறித்து பயன் பெறும் வகையில் இக்கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடைபெறும். அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் பயின்ற மாணவர்கள் இதில் பங்கேற்கலாம்.இதில் பங்கேற்க இயலாத மாணவர்கள் ஆலோசனை பெற முதன்மை கல்வி அலுவலகத்தில் அக்.31 வரை செயல்படும் மாவட்ட கட்டுப்பாட்டு அறையை ( 72006 47475) அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ