தேசிய கபடிக்கு மாணவர் தேர்வு
சோழவந்தான்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் தேசிய கபடி போட்டிக்கு தமிழக அணி வீரர்கள் தேர்வு நடந்தது. இதில் மதுரை அய்யப்பநாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவர் ரித்தீஷ் பாண்டி 14 வயது பிரிவு தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். அடுத்த மாதம் மகாராஷ்டிராவில் நடக்கும் தேசிய போட்டியில் பங்கேற்கிறார். மாணவரை தலைமை ஆசிரியர் செல்வம், உடற்கல்வி ஆசிரியர் மாயக்கண்ணன், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் பாராட்டினர்.