கோயில்களை பாதுகாக்கும் கட்சிகளுக்கு ஆதரவு
மதுரை: மதுரையில் ஹிந்து எழுச்சி இயக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம், பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பொறுப்பாளர் வினோத்குமார் தலைமை வகித்தார். நிறுவன தலைவர் மேகராஜபாண்டியன், மாநில தலைவர் குணா முன்னிலை வகித்தனர். செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். நீதிமன்ற உத்தரவுபடி திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும். கோயில்களில் கட்டண தரிசனத்தை ரத்து செய்ய வேண்டும். கோயில்களை பாதுகாக்கும் கட்சிகளுக்கு தேர்தலில் ஆதரவு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் அருண்பாண்டியன், மாவட்ட செயலாளர் அழகப்பன், ரவி, மகளிரணி தலைவி சாந்தி, வெங்கடேஷ், சவுந்தரபாண்டியன், சுபாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.