உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தமிழ்க்கூடல் நிகழ்ச்சி

 தமிழ்க்கூடல் நிகழ்ச்சி

மதுரை: மதுரை உலகத் தமிழச் சங்கத்தில் 'அவ்வையின் 'அறம்' என்னும் தலைப்பில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி, சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா தலைமையில் நடந்தது. தஞ்சை பாரத் கல்விக் குழுமத் தலைவர் புனிதா பேசுகையில், ''அறம் என்ற சொல்லுக்கு ஒழுக்கநெறி, நீதி தவறாமை, பிறருக்கு உதவி செய்தல், கொடைத் தன்மை என பல பொருள்களை அவ்வையார் வழங்கியுள்ளார். இளம் கவியான அவ்வையை கிழவியாகப் பார்க்கிறோம். கிழவி என்றால் அறிவில் முதிர்ந்தவள் என்று பொருள்'' என்றார். நுால் அரங்கேற்றத்தில், அருணகிரி, சுகுமாரி, சந்தானம், கவிஞர் சாய்மீரா நுால் மதிப்புரை வழங்கினர். சரஸ்வதியின் ஆய்வு நுாலான 'ஐங்குநுாறு மருதத்திணைப் பாடல்கள்', உமாராணியின் புதின நுாலான 'சிட்டு', கவிஞர் நுார்ஜஹானின் சிறுகதை நுாலான 'மனதின் ஓசைகள்', ரேவதிராமின் கவிதை நுாலான 'சிறையில் மழைக்கண் அம் காதல்' ஆகிய 4 நுால்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டன. ஆய்வறிஞர் சோமசுந்தரி ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை