உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தமிழ்க்கூடல் நிகழ்ச்சி

தமிழ்க்கூடல் நிகழ்ச்சி

மதுரை: மதுரை உலகத் தமிழ் சங்கத்தில் 'சங்க இலக்கியங்களில் நீதி' என்ற தலைப்பில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடந்தது. வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன் பேசியதாவது: மக்களை பாதுகாத்து, குற்றங்களை ஆராய்ந்து, நியாயமாக தீர்ப்பு வழங்க வேண்டுமென மன்னர்கள் எண்ணினர். நடுநிலையான ஆட்சியின் அடையாளமாக செங்கோல் கருதப்பட்டது. வீரத்துடன் அறம், நீதி இணைந்திருக்க வேண்டும் என்பதை சங்க இலக்கியங்கள் உணர்த்துகின்றன. மன்னன் தவறு செய்தால் சுட்டிக்காட்டும் துணிவு புலவர்களிடம் இருந்தது. அவர்கள் நாட்டு நலனுக்காக மன்னனுக்கு அறிவுரை கூறியவர்களாகவும் இருந்தனர் என்றார். சங்கத் தமிழ் காட்சிக்கூட விளக்குநர் புஷ்பநாச்சியார் ஒருங்கிணைத்தார். இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் செல்வம் ராமசாமி, மாணவர்கள், தமிழ் அறிஞர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ