மேலும் செய்திகள்
தமிழ்க்கூடல்
28-Oct-2026
மதுரை: மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில், தனி அலுவலர் அவ்வை அருள், துணைத் தலைவர் கவிதா ஜவஹர் வழிகாட்டுதலில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடந்தது. ‘மதுரைக்காஞ்சி உணர்த்தும் தமிழர் வாழ்வியல்’ என்ற தலைப்பில் யாதவர் கல்லுாரி உதவிப் பேராசிரியர் சத்யபாமா பேசுகையில், ‘‘இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த மதுரையின் செழிப்பு, கோட்டை வாயில்கள், பெண்களுக்கான சுதந்திரம், ஜாதி சமயப்பூசல் இல்லாத நல்லிணக்கம், ரோமானியரோடு வணிகத் தொடர்பு, இசை, நடனம், விழாக்கள் குறித்து மதுரைக் காஞ்சி பேசுகிறது. நகர வடிவமைப்புக்கு முன்னோடியாக மதுரை இருந்ததையும் தெரிவிக்கிறது’’ என்றார். சங்க ஆய்வறிஞர் சோமசுந்தரி ஒருங்கிணைத்தார். தமிழறிஞர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
28-Oct-2026