உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஊதிய முரண்பாடை களைய ஆசிரியர்கள் வலியுறுத்தல்

ஊதிய முரண்பாடை களைய ஆசிரியர்கள் வலியுறுத்தல்

மதுரை மதுரையில் அகில இந்திய ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் நடந்தது. தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் மகாலிங்கம், அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் சுஷில் குமார் பாண்டே தலைமை வகித்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வு, பங்களிப்பு ஓய்வூதியம் சார்ந்து விவாதிக்கப்பட்டது. ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை களைந்திட வேண்டும், கற்பித்தல் பணியை தவிர பிற பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேற்கு வங்காளம், ஹரியானா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாநிலங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். சுஷில் குமார் பாண்டே பேசுகையில், '20 லட்சம் ஆசிரியர்கள் சார்ந்து நம் கூட்டணியின் சார்பில் மத்திய அரசிடம் எடுத்துக்கூறியுள்ளோம்; ஆசிரியர் தகுதி தேர்வுபற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்' என்றார். நிர்வாகிகள் ஜோசப் சேவியர், மனோகரன், செல்லப்பாண்டியன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !