உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தொழில்நுட்ப கண்காட்சி

தொழில்நுட்ப கண்காட்சி

மதுரை: மதுரை அரசு மகளிர் பல்தொழில் நுட்பக் கல்லுாரியில் ‘டெக்னிக்கல் எக்ஸ்போ அன்ட் ஸ்டார்ட் அப்’ கண்காட்சியை முதன்மை கல்வி அலுவலர் தயாளன் துவக்கி வைத்தார். முதல்வர் விஜயகுமாரி முன்னிலை வகித்தார். அரசு, உதவிபெறும் பள்ளிளின் 800 மாணவர்கள், 50 ஆசிரியர்கள் பங்கேற்றனர். கல்லுாரிகளில் உள்ள இன்ஜினியரிங், இன்ஸ்ட்ருமென்டேஷன் உள்ளிட்ட துறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவிகள் படைப்பாற்றல், தொழில்நுட்ப அறிவுவை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு தயாரிப்புகளுக்கான மையங்கள் அமைக்கப்பட்டன. கல்லுாரியின் இ.டி.சி., ஐ.ஐ.சி., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. பேராசிரியை ஜெயா கிறிஸ்டி உள்ளிட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள் ஒருங்கிணைத்தனர்.    


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ