வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மதுரை நகரத்தை மேம்படுத்த ஒரு புண்ணாக்கு பிளானையும் காணம்.
மேலும் செய்திகள்
பள்ளிகளில் 'வாட்டர் பெல்' திட்டம் துவக்கம்
02-Jul-2025
ஊழல் பில்லுக்கு ஒப்புதல் பெற திட்டம்!
07-Jul-2025
மதுரை: மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்க திட்டம் 2009ல் அறிவிக்கப்பட்டு 16 ஆண்டுகளாகியும், தவறான திட்டமிடலால் துவங்கப்படவில்லை. ஏற்கனவே மத்திய அரசு 'அண்டர்பாஸ்' பாலத்திற்கு அனுமதி வழங்கிய நிலையில், தமிழக அரசு இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்திற்காக 615.92 ஏக்கர் நில ஆர்ஜிதம் செய்து இந்திய விமானப் போக்குவரத்து ஆணையகத்திடம் தமிழக அரசு ஒப்படைத்திருக்க வேண்டும். 13 ஆண்டுகள் கழித்து 528.65 ஏக்கர் நிலம் மட்டும் 2022 ல் கையகப்படுத்தி ஆணையகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இன்னும் 87 ஏக்கர் நிலம் ஒப்படைக்க வேண்டியுள்ளது.இந்நிலையில் விமான நிலையத்தின் அருகே உள்ள தேசிய (என்.எச்.45) நெடுஞ்சாலையில் 'அண்டர்பாஸ்' பாலம் அமைத்து கீழே வாகனங்கள், மேலே விமானங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் 2021 ஆக. 27 ல் சட்டசபையில் அறிவித்தார். முதல்வரின் அறிவிப்பிற்கு மாறாக தமிழ்நாடு சாலை கட்டமைப்பு மேம்பாட்டு வாரிய முன்னாள் செயல் இயக்குநர் கீதா 'அண்டர்பாஸ்' பாலத்திற்கான செலவை தவறாக தெரிவித்துள்ளார் என்கிறார் ஜெகதீசன்.அவர் கூறியதாவது:ஒரு கி.மீ. துாரத்திற்கு 'அண்டர்பாஸ்' திட்டம் அமைக்க ரூ. 230 கோடி செலவாகும் என்று வல்லுநர்கள் அறிக்கையில் மதிப்பிட்டுள்ளனர். இதை திட்டமிட்டு மாற்றி ரூ.600 கோடி செலவாகும் என்று தவறாக தெரிவித்து 'அண்டர்பாஸ்' திட்டம் வேண்டாம் என தெரிவித்த தமிழ்நாடு சாலை கட்டமைப்பு மேம்பாட்டு வாரிய முன்னாள் செயல் இயக்குநர் கீதா, ரூ.200 கோடியில் மாற்றுச் சாலை அமைக்கலாம் என 2022 நவ.10ல் நடந்த 'வீடியோ கான்பரன்ஸ்' கூட்டத்தில் முடிவு செய்ததால் 'அண்டர்பாஸ்' திட்டம் கிடப்பில் போடப்பட்டது.தற்போது முடிவு செய்யப்பட்டிருக்கும் மாற்றுச் சாலையால் 7 கி.மீ., துாரம் அதிகமாக சுற்றிச் செல்ல வேண்டும். அனைத்து போக்குவரத்து வாகனங்களுக்கும் தினசரி அதிகமான எரிபொருள் செலவு, நேர விரயம், பண விரயம் ஏற்படும். இந்திய விமானப் போக்குவரத்து ஆணையகம் தமிழக அரசு முதலில் அனுப்பிய 'அண்டர்பாஸ்' கோரிக்கைக்கு அனுமதியும் வழங்கியுள்ளது. இத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்றார்.
மதுரை நகரத்தை மேம்படுத்த ஒரு புண்ணாக்கு பிளானையும் காணம்.
02-Jul-2025
07-Jul-2025