உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருப்புவனம் அஜித் கொலை விசாரணை அதிகாரி நியமனம்

திருப்புவனம் அஜித் கொலை விசாரணை அதிகாரி நியமனம்

மதுரை:திருப்புவனம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித், போலீஸ் விசாரணையில் இறந்தது தொடர்பாக, டில்லியில் சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து, விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி., மோஹித்குமாரை நியமித்துள்ளது.மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்த பேராசிரியை நிகிதா, தாயுடன் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரம் காளி கோவிலுக்கு ஜூன் 28ல் சென்றபோது, காரில் இருந்த நகை மாயமானது. இதுதொடர்பாக, கோவில் காவலாளி அஜித்குமார் மீது சந்தேகம் ஏற்பட்டு போலீசில் புகார் செய்தார். விசாரணையின் போது, போலீஸ் தாக்கியதில் அஜித்குமார் இறந்தார். இதுதொடர்பாக, ஐந்து போலீசார் கைது செய்யப்பட்டனர். மானாமதுரை டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, அஜித்குமாரின் கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட்டது. தொடர்ந்து, டில்லியில் சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது. விசாரணை அதிகாரியாக டில்லி டி.எஸ்.பி., மோஹித்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை மதுரை வரும் அவர், நாளை தென்மண்டல சி.பி.ஐ., - எஸ்.பி., சந்தோஷ்குமார், தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா, சிவகங்கை எஸ்.பி., சந்தீஷ் ஆகியோரிடம் ஆலோசனை நடத்திவிட்டு, அஜித்குமார் இறப்பு குறித்து விசாரணை நடத்திய மதுரை மாவட்ட கூடுதல் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷிடம் வழக்கு ஆவணங்களை பெற்று விசாரணையை துவக்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ