போக்குவரத்து ஆணையரகம் முற்றுகை
சென்னை: ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும். தனியார் செயலிகளை முறைப்படுத்த வேண்டும். சொந்த பயன்பாட்டு வாகனங்களை, வாடகைக்கு பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட, ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆட்டோ, கால்டாக்சி, சுற்றுலா கேப் ஓட்டுநர்கள் கூட்டமைப்பினர், ஒரு வாரமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையரக அலுவலகத்தை, நேற்று முற்றுகையிட சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.