மேலும் செய்திகள்
திருப்புத்துாரில் அலுவலகம் திறப்பு
27-Feb-2026
மதுரை: மதுரை டி.வி.எஸ்., கல்பதரு தொண்டு நிறுவனம் சார்பில், மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. கிராமப்புற பெண்களைமுன்னேற்றும் வகையில் தொழில் திறன் மேம்பாடு வழங்கும் பணியில் கல்பதரு ஈடுபட்டுள்ளது. அதில் பயனடைந்தபெண் தொழில்முனைவோர் தங்களின் வெற்றிப் பயணத்தை பகிர்ந்தனர். மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி, பெண் தொழில்முனைவோரின் சாதனையை பாராட்டினார். மதுரை சைபர் குற்றப்பிரிவு அதிகாரி சுதர்சனா, நிதி தொடர்பான மோசடிகளில் இருந்து பெண்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தினார். அறங்காவலர்கள், 200 பெண் தொழில் முனைவோர்கள், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.
27-Feb-2026