உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதிப்பு கூட்டல் பயிற்சி

மதிப்பு கூட்டல் பயிற்சி

உசிலம்பட்டி : கருமாத்துார் அருள் ஆனந்தர் கல்லுாரி, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில் உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர் களுக்கு சிறுதானியங்கள், பால், இறைச்சி பொருட்களை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துதல் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. ஊரகவியல் துறைத்தலைவர் பாண்டீஸ்வரி வரவேற்றார். கல்லுாரி அதிபர் பேசில் சேவியர், செயலர் அந்தோணிசாமி, முதல்வர் அன்பரசு, ராடார் மைய இயக்குநர் புஷ்பராஜ் பங்கேற்றனர். மதுரை வேளாண் கல்லுாரி பேராசிரியர் ஞானமலர், தனியார் உணவு நிறுவனம் சார்பில் பாண்டிமீனா சிறுதானியங்கள், பால், இறைச்சியை மதிப்புக்கூட்டிய பொருட்களாக மாற்றி விற்பனைக்கு கொண்டு செல்வது குறித்து பயிற்சி அளித்தனர். உதவிப் பேராசிரியர் மலர்கண்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி