உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விக்கிரமங்கலம் பள்ளி சம்பவம் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

விக்கிரமங்கலம் பள்ளி சம்பவம் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

மதுரை: மதுரை விக்கிரமங்கலம் கள்ளர் பள்ளியில் நடந்த பாலியல் சம்பவம் குறித்து நடுநிலை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.அச்சங்க மாவட்ட செயலாளர் முத்துகுமார் தெரிவித்துள்ளதாவது: விக்கிரமங்கலம் பள்ளி பாலியல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டம் நடக்கின்றன. ஆசிரியர் மீது எழும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் சமீப காலமாக மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே இவ்விஷயத்தில் நடுநிலையான விசாரணை மேற்கொண்டு உண்மை நிலவரத்தை வெளியிட வேண்டும். பள்ளியில் ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதால் தான் எஸ்.எம்.சி., மூலம் அந்த ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பு வகுப்புகளுக்காக விடுமுறை நாட்களிலும் மாணவிகள் சென்றுள்ளனர். இதற்கு யார் அனுமதி கொடுத்தது.பள்ளி நேரங்களில் புள்ளி விவரங்களை தொகுப்பதிலும் அரசு நலத்திட்டங்களை அறிக்கையாக சமர்ப்பிக்கவுமே ஆசிரியர்கள் தங்கள் முழு நேரத்தை வீணடிக்கின்றனர். இதற்கான தீர்வு இன்னும் இல்லை. சம்பந்தப்பட்ட பள்ளியில் பி.ஜி., ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பிரச்னைகளுக்கு அரசு தீர்வுகாண வேண்டும் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை