உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காத்திருப்பு போராட்டம்

காத்திருப்பு போராட்டம்

மேலுார்: அரிட்டாபட்டியில் ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான மந்தை கருப்பண சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை ( மே 27) நடத்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் முடிவு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் தாசில்தார் முத்துப்பாண்டியிடம் கும்பாபிஷேகத்தை நடத்த ஒரு தரப்பினர் அனுமதி கேட்டனர். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அனுமதி வழங்க முடியாது என தாசில்தார், டி.எஸ். பி., சிவக்குமார், இன்ஸ்பெக்டர் கார்த்திகை ராஜா தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தினர் 300 க்கும் மேற்பட்டோர் தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தியதால் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை