மேலும் செய்திகள்
தினமலர் செய்தி மயானம் துாய்மை
05-Feb-2026
சோழவந்தான்: சோழவந்தான் அருகே வடகாடுபட்டியில் ஆதிதிராவிடர் மயானத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர். இங்கு விக்கிரமங்கலம், மதுரை மெயின் ரோட்டில் மயானம் அமைந்துள்ளது. சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்படாமல் திறந்த வெளியாக உள்ளது. இதனால் செடி, கொடிகள் முளைத்து புதராக மாறிவிட்டது. தண்ணீர்வசதி, காத்திருப்போர் கூடம் அமைக்காததால் இறுதிச் சடங்குகள் செய்வதற்கு சிரமம் ஏற்படுகிறது. விளக்குகள் இல்லாததால் இரவில் விஷ ஜந்துக்களால் விபரீதம் விளைய வாய்ப்புள்ளது. மேலும் மது அருந்தவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.
05-Feb-2026