உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உறுப்பினர்கள் சேர்க்கை டார்கெட் மகளிர் நிர்வாகிகள் புலம்பல் * கட்டணத்தால் கஷ்டமம்மா...

உறுப்பினர்கள் சேர்க்கை டார்கெட் மகளிர் நிர்வாகிகள் புலம்பல் * கட்டணத்தால் கஷ்டமம்மா...

மதுரை:தமிழக மகளிர் காங்.,ல் உறுப்பினர்கள் சேர்க்கை இலக்கை எட்டுவதில் சவாலாக உள்ளது என மாவட்ட நிர்வாகிகள் புலம்புகின்றனர்.மகளிர் காங்., மாநில தலைவியாக ஹசினா சையது தேர்வான பின் அகில இந்திய மகளிர் காங்., அறிவுறுத்தல் படி மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மகளிர் காங்., செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். இதில் பல மாவட்டங்களில் செயல்பாடுகள் திருப்தியளிக்கவில்லை. ஆனால் மாநில நிர்வாகிகள் சிபாரிசில் மாவட்டங்களில் பதவியில் ஒட்டிக்கொள்ளவதில் அவர்கள் ஆர்வம் காட்டினர். இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் 10க்கும் குறைவாகவே உறுப்பினர்கள் உள்ளதும் தெரியவந்தது. இதுகுறித்து தேசிய தலைமைக்கு தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் மாநில அளவில் மகளிர் நிர்வாகிகள் கூண்டோடு கலைக்கப்பட்டனர்.* உறுப்பினர் சேர்க்கை 'ஆபர்'இதையடுத்து மாவட்டம் வாரியாக மகளிர் உறுப்பினர்கள் சேர்க்க நிர்வாகிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி மாவட்ட தலைவி பொறுப்பில் இருந்தவர்களுக்கு 150, வட்டார தலைவிக்கு 50, கிராம கமிட்டி தலைவிக்கு 10 என மகளிர் உறுப்பினர்கள் சேர்க்க புதிதாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.ஆனால் உறுப்பினர் சேர்க்கைக்கு ரூ.100 கட்டணம் கட்டாயம் என்ற நிபந்தனையால் உறுப்பினர்களை சேர்க்க முடியாமல் பல மாவட்டங்களிலும் நிர்வாகிகள் திண்டாடுகின்றனர். குறிப்பாக சீனியர் நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.மகளிர் காங்., மாவட்ட நிர்வாகிகள் கூறியதாவது: உறுப்பினர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை, வயது சான்றிதழ், புகைப்படம், அலைபேசி எண்ணுடன் ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை பெரும்பாலும் உறுப்பினர்கள் சேர்க்கும் நிர்வாகிகள் ஏற்றுக்கொள்கின்றனர். 200க்கு மேல் சேர்த்தால் மாவட்டம், 500 உறுப்பினர்களுக்கு மேல் மாநில நிர்வாகிகள் பொறுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜன.,1 கடைசி நாள். மொத்தமுள்ள 72 காங்.,மாவட்டங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் உறுப்பினர்கள் சேர்க்கை இலக்கு பெரும் சவாலாக உள்ளது. ரூ.100 கட்டணம் என்பதை தவிர்த்து இருக்கலாம். 500 பேர் சேர்க்க வேண்டும் என்றால் ரூ.50 ஆயிரம் செலவிட வேண்டியுள்ளது. அதுபோல் பல ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்த சீனியர்களுக்கு இலக்கில் விலக்கு அளிக்க வேண்டும் என்றனர்.

பாக்ஸ்...

----* ராமநாதபுரம் 'டாப்'மாநில அளவில் ராமநாதபுரம் மகளிர் காங்., தலைவியாக இருந்த ராமலட்சுமி 2000க்கு மேல் உறுப்பினர்கள் சேர்ந்து முதலிடத்தில் உள்ளார். இதுபோல் அரியலுார் மாரியம்மாள், கன்னியாகுமரி வதன நிஷா ஆகியோரும் அதிக எண்ணிக்கையில் சேர்த்துள்ளனர். இவர்களின் பணியை அங்கீகரித்து அகில இந்திய மகளிர் காங்.,ல் தேசிய உறுப்பினர்கள் பதவி வழங்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம் ராமலட்சுமி கூறுகையில், கடந்த உள்ளாட்சி தேர்தலில் மகளிருக்கு 33 சதவீதம் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டது. இதுபோல் வரும் தேர்தல்களில் மகளிர் அதிக எண்ணிக்கையில் போட்டியிட வாய்ப்பு உள்ளது. அப்போது உறுப்பினர்கள் இல்லை என்றால் கஷ்டமாக இருக்கும். அதிக எண்ணிக்கையில் சேர்த்ததால் என்னை அகில இந்திய தலைமை பாராட்டியது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !