டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு விண்ணப்பிக்கலாம்
மதுரை: மதுரை மாவட்டத்தில் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணிக்கு (டிஜிட்டல் கிராப் சர்வே) தன்னார்வலர்கள், விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். 13 ஒன்றியங்களின் விவசாய சாகுபடி பரப்பளவு கணக்கிடப்படுகிறது. வேளாண், தோட்டக்கலை உட்பட பல்வேறு துறைகளின் கீழ் ஒருங்கிணைந்து இப்பணி நடக்கிறது. விவசாயிகளின் வயலுக்குச் சென்று சாகுபடி செய்துள்ள தானியத்தை ஆன்ட்ராய்டு' அலைபேசியில் போட்டோ எடுத்து மத்திய அரசின் 'போர்ட்டலில்' பதிவிட வேண்டும். ஒவ்வொரு சப்டிவிஷன் கணக்கெடுப்பு பணி பதிவேற்றத்திற்கு ரூ.3 வீதம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். அந்தந்த வட்டாரங்களில் உள்ளவர்கள் காலை, மாலையில் தினமும் 200 முதல் 250 சப்டிவிஷன் கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு அந்தந்த ஒன்றிய வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம். சந்தேகங்களுக்கு : 98651 53344.