மேலும் செய்திகள்
திருவண்ணாமலைக்கு பக்தர்கள் பாத யாத்திரை
26-Nov-2024
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த அரடாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் அரவிந்தன், 35, கோகுல், 27, சதீஷ், 21, பூபதி, 23. திருப்பதிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு அரடாப்பட்டு கிராமத்தில் இருந்து காரில் சென்று கொண்டிருந்தனர்.காரை அரவிந்தன் ஓட்டினார். நேற்று முன்தினம் அதிகாலை, 12:30 மணிக்கு திருவண்ணாமலை - வேலுார் சாலையில்சென்று கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி அருகே உள்ள பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது. இதில், அரவிந்தன் சம்பவ இடத்திலேயே பலியானார். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், 108 அவசர ஆம்புலன்ஸ் மூலம் மற்ற, மூவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
26-Nov-2024