பரசலுார் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
மயிலாடுதுறை,:மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் அருகே பரசலுார் கிராமத்தில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான, 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இளம் கொம்பனையாள் சமேத வீரட்டேஸ்வரர் கோவிலில் நேற்று கும்பாபிேஷகம் நடைபெற்றது.தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மதுரை ஆதீனம் 293வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.