மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 9 சவரன் நகை திருட்டு
14-Sep-2025
மயிலாடுதுறை: சீர்காழி அருகே பூட்டிய வீட்டில் பீரோவை உடைத்து 35 சவரன் நகைகள், ரூ.75 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா மாங்கனாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தஸ்லீம். வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். வீட்டில் அவரது மனைவி ஜாஸ்மின்,32, தாய் ஜலிபா பீவி, இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இரு தினங்களுக்கு முன்பு அருகில் உள்ள ஜாஸ்மினின் தந்தை வீட்டிற்கு சென்றனர். இவரது வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியிருக்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் சுதா என்பவரும் தனது சொந்த ஊருக்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று காலை ஜாஸ்மின் வீட்டிற்கு வந்தபோது கதவுகள் அனைத்தும் பூட்டியிருக்க, வீட்டின் அறையில் இருந்த 4 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்து 35 சவரன் நகைகள், ரூ 75 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது. வெளியில் உள்ள படி வழியாக மாடியில் உள்ள வீட்டிற்கு சென்ற மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து திருட முயன்றுள்ளனர். அங்கு எதுவும் கிடைக்காத நிலையில், வீட்டின் உள்புறம் உள்ள படிக்கட்டின் வழியாக ஜாஸ்மின் வீட்டிற்குள் புகுந்து நகை மற்றும் பணத்தை திருடியது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் ஆணைக்காரன் சத்திரம் போலீசார் இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
14-Sep-2025