உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி நான்கு வாலிபர்கள் இறப்பு

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி நான்கு வாலிபர்கள் இறப்பு

சீர்காழி: சீர்காழி மற்றும் கல்லணையில், கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி நான்கு வாலிபர்கள் உயிரிழந்தனர்.மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள கொண்டல் கிராமத்தை சேர்ந்தவர் சிபிராஜ், 20. அவரது தம்பி பரத்ராஜ், 19. இவர்கள் உறவினர், மயிலாடுதுறை, கூறைநாடு பகுதியை சேர்ந்த அருண் ராஜ்குமார், 21. மூவரும் நேற்று மதியம் பனங்காட்டங்குடி கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றனர். எதிர்பாராத விதமாக சிபிராஜ், அருண் ராஜ்குமார் நீரில் மூழ்கினர். கிராம மக்கள் நீண்ட தேடுதலுக்கு பின் இருவரையும் சடலமாக மீட்டனர். ஆனைக்காரன் சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.திருச்சி மாவட்டம், தாராநல்லுாரை சேர்ந்த பிரசாத், 19, லோகேஷ், 22, கிரிதரன், 21, விக்னேஷ், 21, ஆகிய நான்கு பேரும் நேற்று மாலை, தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளித்தனர். அப்போது ஆழமான பகுதியில் சிக்கிய பிரசாத், லோகோஷ் இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர். தோகூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ