உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / வீடுகளை சேதப்படுத்திய கஞ்சா வாலிபர் தடுக்க முயன்ற போலீஸ் மீது தாக்குதல்

வீடுகளை சேதப்படுத்திய கஞ்சா வாலிபர் தடுக்க முயன்ற போலீஸ் மீது தாக்குதல்

மயிலாடுதுறை: சீர்காழி அருகே வீடுகளை சேதப்படுத்திய கஞ்சா வாலிபரை தடுக்க முயன்றபோது போலீசை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மணிக்கிராமம் பகுதியை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் சிவராஜ்,30;கம்பி பிட்டர். திருமணமாகாத இவர், அவ்வப்போது கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் மதியம், இவர் உறவினர் ஒருவரின் டூவீலரை எடுத்துக்கொண்டு நாங்கூர் அண்ணன் பெருமாள் கோவில் சாலையில் சென்றார். அப்போது அவ்வழியாக வந்த பெண் ஒருவரை பின் தொடர்ந்து சென்றதால், அப்பெண், உறவினர்களிடம் கூறியதை அடுத்து அவர்கள் விரைந்து வந்து சிவராஜை பிடித்து திருவெண்காடு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து, பெயிலில் விட்டனர். தொடர்ந்து, அன்றிரவு திருவெண்காடு அண்ணா நகர் பகுதிக்கு வந்த சிவராஜ், கஞ்சா எங்கு கிடைக்கும் என கேட்டு ரகளையில் ஈடுபட்டதுடன், அப்பகுதியில் உள்ள கணேசன், மாரிமுத்து உள்ளிட்ட 3 பேரின் வீடுகளின் ஜன்னல்கள், மின்விசிறிகள், மின் விளக்குகளை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இது குறித்த தகவலின் பேரில் திருவெண்காடு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீசார் தினகர், ஜெயக்குமார் ஆகிய இருவரும் விரைந்து சென்று சிவராஜை பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது சிவராஜ் தனது கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் பைபால் அடித்ததில் ஜெயக்குமார் காயமடைந்தார். இதனை கண்ட மக்கள் திரண்டு வந்து சிவராஜை சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் சிவராஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். வீடுகளை சேதப்படுத்தியது குறித்த புகாரின் பேரில் திருவெண்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை