டிராக்டர் மோதி மாணவர் பலி
மயிலாடுதுறை: சீர்காழி அருகே, டிராக்டர் மோதியதில், பள்ளி மாணவர் பலியானார். மயிலாடுதுறை மாவட்டம், தென்னாம்பட்டினத்தை சேர்ந்தவர் வடிவேலு மகன் ஸ்ரீகாந்த், 13. கோனையாம்பட்டினம் அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படித்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த, 7ம் வகுப்பு படிக்கும் பிரசன்னா, 12, என்ற மாணவரும் நேற்று காலை, வீட்டிலிருந்து சைக்கிளில் பள்ளிக்கு சென்றனர். தென்னாம்பட்டினம் பாலம் அருகே சென்றபோது, அவ்வழியாக குடிநீர் ஏற்றி வந்த டிராக்டர் மோதியது. இவ்விபத்தில், உடல் நசுங்கி ஸ்ரீகாந்த் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த பிரசன்னாவை, சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த திருவெண்காடு போலீசார், டிராக்டர் டிரைவரான, பெருந்தோட்டம் குருமூர்த்தியை கைது செய்தனர்.