வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த ராமனை தூக்கில் போடுங்கள். எருமை
நாகப்பட்டினம்:நாகை அருகே வடமாநில மூதாட்டியை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில், கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.நாகை மாவட்டம் திருப்பூண்டி, கடைத்தெரு பகுதியில், கடந்த 2ம் தேதி அதிகாலை 65 வயது மதிக்கத்தக்க வடமாநில மூதாட்டி தலையில் பலத்த காயத்துடன் மயங்கி கிடந்தார். இதைப் பார்த்த அப்பகுதியை சேர்ந்தோர், அவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி இறந்தார். கீழையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். விசாரணையில், மூதாட்டியை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ததில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: முப்பத்திக்கோட்டகத்தை சேர்ந்தவர் ராமன்,27; கொத்தனார். இவர் சுற்று வட்டார பகுதிகளில் வேலைக்கு சென்று. வீடு திரும்பும் போது, திருப்பூண்டி கடைத்தெருவில் டீ அருந்துவது வழக்கம். டீக்கடை அருகில் உள்ள பஸ் ஸ்டாப்பில் மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி தங்கியிருப்பதை தினமும் பார்த்துள்ளார்.கடந்த 2ம் தேதி இரவு மது போதையில் வந்த ராமன், மூதாட்டியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மூதாட்டி எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த ராமன், மூதாட்டியின் தலையில் கல்லால் தாக்கி அருகில் இருந்த கருவேல காட்டுப்பகுதிக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.மயங்கி கிடந்த மூதாட்டியை இழுத்துச் சென்று கடைத்தெரு பகுதியில் போட்டு விட்டு தப்பியுள்ளார். அப்பகுதியில் சி.சி.டி.வி. பதிவுகளை சோதனை செய்ததில், ராமன் மூதாட்டியை அடித்து இழுத்துச் சென்றது தெரிய வந்தது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மகிழி பாலத்தில் பதுங்கியிருந்த ராமனை போலீசார் பிடிக்க முயன்ற போது தப்ப முயற்சித்த ராமனுக்கு இடது காலில் முறிவு ஏற்பட்டது. போலீசார் ராமனை கைது செய்து, மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இந்த ராமனை தூக்கில் போடுங்கள். எருமை