உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாகப்பட்டினம் / வேளாங்கண்ணி சர்ச் விடுதியில் தம்பதி உட்பட மூவர் மர்மச்சாவு

வேளாங்கண்ணி சர்ச் விடுதியில் தம்பதி உட்பட மூவர் மர்மச்சாவு

நாகப்பட்டினம்: திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே விருப்பாச்சிபுரத்தை சேர்ந்தவர் கலியபெருமாள், 49. இவரது மனைவி விஜய குமாரி, 44. கலியபெருமாளின் நண்பர் லோகநாதன், 45. மூவரும் அக்., 30ல் வேளாங்கண்ணியில் சர்ச்சுக்கு சொந்தமான விடுதியில் தங்கினர். நேற்று மாலை அவர்கள் தங்கியிருந்த அறை ஜன்னல் திறந்து கிடந்துள்ளது. அவ்வழியே சென்றவர்கள் பார்த்த போது, மின்விசிறியில் ஒருவர் துாக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். வேளாங்கண்ணி போலீசார், அறை கதவை உடைத்து பார்த்த போது, அறைக்குள் கலியபெருமாள் துாக்கிலும், லோகநாதன், விஜயகுமாரி தரையிலும் இறந்து கிடந்தனர். போ லீசார் கூறியதாவது: கலியபெருமாள் நண்பரான லோகநாதனுக்கும், விஜயகுமாரிக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இருவரும் கடந்த மாதம் வீட்டைவிட்டு வெளியேறி உள்ளனர். கள்ளக்காதலை கைவிட இருவரும் மறுத்ததால், இருவரையும் சமாதானம் செய்து, கலியபெருமாள் வேளாங்கண்ணி அழைத்து வந்துள்ளார் . அங்கு, லோகநாதன், விஜயகுமாரிக்கு உணவில் விஷம் கொடுத்து கொலை செய்து, தானும் துாக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். அறையில் கிடந்த கடிதத்தில், 'எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை' என, எழுதி இருந்தது. இவ்வாறு போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை