உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இரண்டு ஆண்டுக்கு பின் நிரம்பிய ஆண்டாபுரம் ஏரிமதகு, வாய்க்கால் சீரமைக்காததால் விவசாயிகள் கவலை

இரண்டு ஆண்டுக்கு பின் நிரம்பிய ஆண்டாபுரம் ஏரிமதகு, வாய்க்கால் சீரமைக்காததால் விவசாயிகள் கவலை

இரண்டு ஆண்டுக்கு பின் நிரம்பிய ஆண்டாபுரம் ஏரிமதகு, வாய்க்கால் சீரமைக்காததால் விவசாயிகள் கவலைமோகனுார்:இரண்டு ஆண்டுக்கு பின், ஆண்டாபுரம் ஏரி நிரம்பிய நிலையில், மதகு பழுதடைந்துள்ளதாலும், வாய்க்கால் சீரமைக்காததாலும், தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டம், மோகனுார் தாலுகா, ஆண்டாபுரத்தில், 91 ஏக்கரில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு, கொல்லிமலையில் இருந்து கொட்டும் மழைநீர், சேந்தமங்கலம், பழையபாளையம் ஏரி நிரம்பி, அங்கிருந்து உபரிநீர் ஆண்டாபுரம் ஏரிக்கு வந்தடைகிறது. இரண்டு ஆண்டுக்கு பின், 2024 டிசம்பரில் ஏரி நிரம்பியது. இதனால் சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தது. ஆண்டாபுரம் பகுதி வானம் பார்த்த பூமியாக உள்ளது. இங்கு, ஒரு போகம் மட்டுமே சாகுபடி செய்யமுடியும். தற்போது, நெல், சோளம், மக்காச்சோளம், எள், பருத்தி போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பயிர்களுக்கு, ஏரி மூலம் பாசன வசதி பெறப்படுகிறது.ஆனால், ஏரியின் மதகு பழுதடைந்துள்ளதாலும், தண்ணீர் செல்லும் வாய்க்கால் சீரமைக்காததாலும், வெளியேற்றப்படும் தண்ணீர், நேராக கரைபோட்டான் ஆற்றில் கலந்துவிடுகிறது. இதனால், பயிர்கள் மழையை நம்பியே உள்ளன. இரண்டு ஆண்டுக்கு பின் ஆண்டாபுரம் ஏரி முழுமையாக நிரம்பியும், அவற்றை பயன்படுத்த முடியாததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.எனவே, மதகை சரிசெய்வதுடன், வாய்க்காலை சீரமைத்தால் மட்டுமே ஏரி நீரை பயன்படுத்தி, பயிர் சாகுபடி செய்ய முடியும். அவற்றை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட துறையினர், மதகை சரி செய்யவும், வாய்க்காலை சீரமைக்கவும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை