உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / எந்த மொழிக்கும் நாங்கள் எதிரிகள் அல்ல; அமைச்சர் மகேஷ்

எந்த மொழிக்கும் நாங்கள் எதிரிகள் அல்ல; அமைச்சர் மகேஷ்

எந்த மொழிக்கும் நாங்கள் எதிரிகள் அல்ல; அமைச்சர் மகேஷ்திருச்செங்கோடு:''எந்த மொழிக்கும் நாங்கள் எதிரிகள் அல்ல. ஆனால், ஹிந்தியை ஏற்றுக்கொண்டால் தான் நாங்கள் நிதி தருவோம் என்று கூறுவது, 'பிளாக் மெயில்' செய்வதுபோல் உள்ளது,'' என, கல்வி அமைச்சர் மகேஷ் கூறினார்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவனத்தில் மகளிர் தின விழா, சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா, நேற்று நடந்தது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கலந்துகொண்டார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:இதுவரை கல்வி கற்ற நாம் அனைவரும், இருமொழி கல்வியில் தான் கல்வி கற்றுள்ளோம். இப்போது எதற்காக மாணவர்களிடையே ஹிந்தியை திணிக்க வேண்டும். மாணவர்கள் ஆசைப்பட்டால் எத்தனை மொழி வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளட்டும். ஆனால், கட்டாயமாக திணிக்க கூடாது என்பது தான் எங்கள் எண்ணம். எந்த மொழிக்கும் நாங்கள் எதிரிகள் அல்ல. ஹிந்தியை ஏற்றுக்கொண்டால் தான் நாங்கள் நிதி தருவோம் என்று கூறுவது, 'பிளாக் மெயில்' செய்வதுபோல் உள்ளது. ரயிலில் பிஸ்கட் கொடுத்து பயணிகளை ஏமாற்றுவதுபோல், பள்ளி மாணவர்களுக்கு பிஸ்கட், மிட்டாய் கொடுத்து, மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவு கேட்டு கையெழுத்து வாங்கும், பா.ஜ.,வின் நடவடிக்கை, 'மிஸ்டு கால்' கொடுத்து கட்சியில் சேர வைத்ததை போன்றதாகும். நாங்கள் மொழி பெயர்ப்பாளர்களை உருவாக்க ஆசைப்படவில்லை. அறிஞர்களையும், விஞ்ஞானிகளையும் உருவாக்கத்தான் ஆசைப்படுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ