ஆடுகளை தொடர்ந்து வேட்டையாடும்மர்ம விலங்கால் பொதுமக்கள் அச்சம்
சேந்தமங்கலம்,:கெல்லிமலையில், 14 பஞ்.,கள் உள்ளன. அனைத்தும் மலை கிராமங்களாக உள்ள நிலையில், குண்டூர் நாடு பஞ்., அரியூர் நாடு பஞ்., வளப்பூர் நாடு பஞ்., ஆகியவை, மலையின் தெற்கு பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து, 2,000மீ., உயரத்தில் உள்ளது. இந்த மலைப்பகுதியின் அடுத்த பகுதியாக புலியஞ்சோலை உள்ளது. இந்த, 3 பஞ்.,ல் மட்டும், 25க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்கள் ஒவ்வொன்றுக்கும் இடையே, 10 கிலே மீட்டர் துாரத்துக்கு வனப் பகுதி அமைந்துள்ளது. இதனால், ஒரு கிராமத் தில் உள்ளவர்கள், மற் றொரு கிராமத்திற்கு செல்ல வனப்பகுதியில் செல்லும் நிலை உள்ளது.இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தபோது, சிறுத்தை புலி சென்றதாக கூறப்பட்டது.அதன்பின், இதுகுறித்து எந்த தகவ லும் இல்லை. ஆனால், கடந்த, 15 நாட்களாக இந்த, 3 பஞ்., பகுதிகளில், பட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வெள் ளாடுகளை, மர்ம விலங்கு கடித்து குதறி வருகின்றன.இந்த மர்ம விலங்கை கண்டுபிடிக்க வனத் துறை சார்பில், 150, 'டிராக் கேமரா'க்கள் வைத்து கண்காணித்து வருகின்றனர். இதில், நாய்கள் தான், பட்டிக்குள் சென்று ஆடுகளை கடித்து வருவதாக கூறப்பட்டது. ஆனால், தொடர்நது ஆடுகளை மர்ம விலங்கு வேட்டையாடி வருவதால், அப் பகுதி மக்கள் அச்சமடைந் துள்ளனர்.