பவர் ஹவுஸ் அருகே குப்பைகொட்டுவதால் தீ விபத்து அபாயம்
'பவர் ஹவுஸ்' அருகே குப்பைகொட்டுவதால் தீ விபத்து அபாயம்குமாரபாளையம்,: குமாரபாளையம் - சேலம் சாலை, குளத்துக்காடு பகுதியில், 'பவர் ஹவுஸ்' உள்ளது. இப்பகுதியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குப்பை கழிவுகளை, 'பவர் ஹவுஸ்' மற்றும் மின்மாற்றி அருகே கொட்டி குவித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன், இந்த குப்பையில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.இதனால், மின்வாரிய அதிகாரிகள், பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்தனர். பின், குமாரபாளையம் தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். தற்போது அதே இடத்தில் குப்பையை கொட்டி குவித்து வருகின்றனர். மீண்டும் தீவிபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அசம்பாவிதம் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இங்கு குப்பை கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.