மேலும் செய்திகள்
விருதுநகரில் சணப்பை செடி சாகுபடி அதிகரிப்பு
17-Jan-2025
சணப்பை, தக்கை பூண்டு விதைக்க பருத்தி விவசாயிகளுக்கு அறிவுரைநாமகிரிப்பேட்டை, :'பருத்தி விவசாயிகள், சணப்பை, தக்கை பூண்டு விதைக்க வேண்டும்' என, நாமகிரிப்பேட்டை வேளாண் உதவி இயக்குனர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில், பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் வயலிலே மடக்கி உழுவதற்கு சணப்பு அல்லது தக்கைப்பூண்டு விதைக்க வேண்டும். இவ்வாறு செய்வது- அனைத்து பருத்தி ரகங்களுக்கும் ஏற்றது. பருத்தி சாகுபடியின் போது இருவரிசையில் பருத்தி விதைத்தபின், ஒரு வரிசை சணப்பை அல்லது தக்கைப்பூண்டினை விதைக்கலாம். 50 சதவீதம் பசுந்தாள் பயிர்கள் பூக்க ஆரம்பித்தவுடன், மடக்கி உழவு செய்யவேண்டும். இதனால் மண் வளம் மேம்படுவதோடு களைக்கட்டுப்பாடும் சாத்தியமாகிறது. இதனால், 16 சதவீதம் மகசூல் மற்றும் 33 சதவீதம் களைக்கட்டுப்பாடும் செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
17-Jan-2025