மேலும் செய்திகள்
தொழிற்சாலை பஸ் விபத்து 10 ஊழியர்கள் காயம்
14-Mar-2025
புதுச்சத்திரம் அருகே சுடுகாட்டில் மாந்திரீகமாஎரிந்து கிடந்த மண்டை ஓடுகளால் பரபரப்புபுதுச்சத்திரம்:புதுச்சத்திரம் அருகே, சுடுகாட்டில் ஒரே இடத்தில் எரிந்து கிடந்த, ஆறு மனித மண்டை ஓடுகளால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே கோவிந்தம்பாளையம் பகுதியில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கிற்கு உறவினர்கள், நேற்று மதியம் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு சென்றனர். அப்போது, சுடுகாட்டில் ஒரே இடத்தில், ஆறு மனித மண்டை ஓடுகள் எரிந்த நிலையிலும், அதன் அருகே அரிவாள், மாந்திரீக படங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, ஏ.எஸ்.பி., ஆகாஷ்ஜோஷி, இன்ஸ்பெக்டர் கோமதி, வி.ஏ.ஓ., கார்த்திக் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.ஒரே இடத்தில், ஆறு மனித மண்டை ஓடுகள் இருந்த நிலையில், மனிதர்களை கொலை செய்து எரித்தனரா? அல்லது மாந்திரீகம் செய்வதற்காக சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சடலத்தில் இருந்து மண்டை ஓடுகளை எடுத்து பூஜை செய்தனரா? அல்லது வெளியே இருந்து கொண்டு வந்தார்களா? என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
14-Mar-2025