உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புன்னைவன நாதீஸ்வரர் கோவிலில் திருப்பணிசுண்ணாம்பு, வெல்லம், கடுக்காய் கலவை பூச்சு

புன்னைவன நாதீஸ்வரர் கோவிலில் திருப்பணிசுண்ணாம்பு, வெல்லம், கடுக்காய் கலவை பூச்சு

புன்னைவன நாதீஸ்வரர் கோவிலில் திருப்பணிசுண்ணாம்பு, வெல்லம், கடுக்காய் கலவை பூச்சுமோகனுார்:மோகனுார் தாலுகா, எஸ்.வாழவந்தியில், பழமையான புன்னைவன நாதீஸ்வரர் கோவில் உள்ளது. 700 ஆண்டுக்கு முற்பட்ட இக்கோவிலின் கன்னி மூலையில், விநாயகர், ஈஸ்வரனின் வடபுறம் அழகுபூரணி அம்பாள் வீற்றிருப்பது சிறப்பம்சம். புன்னை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் ஈஸ்வரன் கோவில் அமைந்துள்ளதால், இக்கோவில் புன்னைவன நாதீஸ்வரர் என பெயர் பெற்றது. தற்போது புன்னை மரங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.புன்னைவன நாதீஸ்வரர், அழகு பூரணி அம்மாள், விநாயகர், சண்டிகேஸ்வரர் சன்னதி என, அனைத்து கடவுள்களுக்கும் தனித்தனி சன்னதி அமைந்துள்ளன. இக்கோவில்கள் அனைத்தும், ஒரே சீரான அமைப்புக்கொண்ட செவ்வக வடிவ கற்களால் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இக்கோவில் சிதிலமடைந்தது. மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், பக்தர்கள் சென்று வழிபட முடியாத நிலை ஏற்பட்டது.இதையடுத்து, கோவில் திருப்பணி பக்தர்களின் நன்கொடை மூலம் தொடங்கியது. அதற்காக, இரண்டு கோடி ரூபாய்க்கு திட்டம் மதிப்பிடப்பட்டுள்ளது. கற்பகிரகம், மண்டபம், விநாயகர், அழகுபூரணி அம்மாள் சன்னதி புனரமைக்கப்பட்டு வருகிறது. தற்போது, கோபுரம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதற்காக, பழைய முறைப்படி கலவை கலந்து, பூச்சு வேலை மேற்கொள்கின்றனர். அதன்படி, கடுக்காய், வெல்லம் இவற்றை ஐந்து நாட்கள் தண்ணீரில் ஊரவைக்கின்றனர். தொடர்ந்து அந்த தண்ணீரை எடுத்து, சலித்த மணலில் சுண்ணாம்புடன் கலக்கின்றனர். பின், ராட்சத கிரைண்டரில் போட்டு அரைக்கின்றனர். அதன்பின், அந்த கலவையை கொண்டு, கோபுரம் கட்டுமான பணிக்கும், பூச்சு வேலைக்கும் பயன்படுத்துகின்றனர்.மன்னர்கள் காலத்தில் கோவில் கட்டுவதற்கு இதுபோன்ற முறையைத்தான் பயன்படுத்தினர். அதன் காரணமாகவே, இன்றும், கோவில்கள் ஸ்திரமாக நிலைத்து நிற்கிறது. அதேமுறையை பின்பற்றி கோவில் கட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை