உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / போலீசார், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்துவிவசாயி, தொழிலாளி தற்கொலை முயற்சி

போலீசார், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்துவிவசாயி, தொழிலாளி தற்கொலை முயற்சி

போலீசார், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்துவிவசாயி, தொழிலாளி தற்கொலை முயற்சிநாமக்கல்:தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்தும், பட்டா கேட்டு, 10 ஆண்டுகளாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், இரண்டு பேர், கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றனர்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த கொடம்பகாட்டை சேர்ந்தவர் விவசாயி நித்தியானந்த், 34. இவர், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். அப்போது, டூவீலரில் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து, தன் உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தடுத்து நிறுத்தி, அவர் மீது தண்ணீர் ஊற்றி, தற்கொலையை தடுத்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.விசாரணையில், வையப்பமலை அருகே, மரப்பரை அங்காளம்மன் கோவிலில், மாசி திருவிழாவில் கங்கணம் கட்டி நேர்த்திக்கடனுக்கு காத்திருந்தபோது, அப்பகுதியை சேர்ந்த சிலர் தாக்கி கோவிலை விட்டு வெளியேற்றினர். இதுகுறித்து, எலச்சிபாளையம் போலீசில் புகாரளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து, தன்னையும் கோவிலுக்குள் அனுமதிக்க மறுக்கின்றனர்.இதுதொடர்பாக, கலெக்டரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், மனஉளைச்சல் ஏற்பட்டு, பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தேன் என, தெரிவித்தார். தொடர்ந்து போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.அதேபோல், நாமக்கல் அடுத்த புதுச்சத்திரம் ஒன்றியம், அகரம் பஞ்., ஓலப்பாளையம் அருந்ததியர் காலனியை சேர்ந்த வீரமணி, 38; கூலி தொழிலாளியான இவர், பல ஆண்டுகளாக கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார். 10 ஆண்டுகளாக பட்டா கேட்டு மனு அளித்தும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அவரையும், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீட்டு, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவங்களால், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ