உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / லாரி மீது சரக்கு வாகனம் மோதிதொழிலாளியின் கால்கள் சேதம்

லாரி மீது சரக்கு வாகனம் மோதிதொழிலாளியின் கால்கள் சேதம்

லாரி மீது சரக்கு வாகனம் மோதிதொழிலாளியின் கால்கள் சேதம் குமாரபாளையம்:சென்னையிலிருந்து, கேரளா நோக்கி ரப்பர் லோடு ஏற்றிய லாரி ஒன்று, குமாரபாளையம் அருகே சேலம் - கோவை புறவழிச்சாலையில், நேற்று மாலை சிவசக்தி நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. லாரியை ஆத்துாரை சேர்ந்த சுரேஷ், 62, ஓட்டினார். லாரியின் பின்னால் நிலங்களுக்கு வேலி அமைக்கும், 8 அடி உயரம் கொண்ட கற்கள் லோடு ஏற்றியவாறு, சங்ககிரியிலிருந்து நசியனுார் நோக்கி சரக்கு வாகனம் வந்து கொண்டிருந்தது.சரக்கு வாகனத்தை நசியனுாரை சேர்ந்த இளவரசன், 27, ஓட்ட, வேலி கற்கள் மீது நசியனுாரை சேர்ந்த கூலித் தொழிலாளி குமார், 51, என்பவர் அமர்ந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் லாரி ஓட்டுனர் திடீரென பிரேக் போட்டதாக தெரிகிறது. இதனால் சரக்கு வாகனம், லாரியின் பின் பகுதியில் மோதியது. இதில், கற்களின் மீது அமர்ந்து வந்த தொழிலாளி குமார் கால்கள் மீது, கற்கள் சரிந்து விழுந்ததில், இரு கால்களும் பலத்த காயமடைந்தது. குமாரை மீட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ