தீரன் சின்னமலை பேரவையை ரத்து செய்ய கோரிக்கை மனு
நாமக்கல், ஜூலை 1'தீரன் சின்னமலை பேரவையை ரத்து செய்ய வேண்டும்' என, கோகுல்ராஜ் தாயார் சித்ரா, அண்ணன் கலைச்செல்வன் ஆகியோர், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:சேலம் மாவட்டம், ஓமலுார் சாஸ்தா நகரில் வசித்து வருகிறேன். என் மகன் கோகுல்ராஜ், 2015ல், ஆணவ படுகொலை செய்யப்பட்டார். என்மகன் கொலையின் முக்கிய குற்றவாளி யுவராஜ் தலைமையில் தீரன் சின்னமலை பேரவை என்ற சங்கத்தை, நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும், என் மகன் கொலையாளிகள் மேலும், 10 பேர் நடத்தி வருகின்றனர்.இவர்கள், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பெயரை கெடுக்கும் நோக்கில், பல்வேறு குற்றச்சம்பவங்கள், பணம் பரிப்பது போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால், என் மகன் கொலையாளிகள் நடத்தி வரும் தீரன் சின்னமலை பேரவையை தடை செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, கடந்த ஏப்., 7 ல், சேலம் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.