தேவராட்டம், ஒயிலாட்டம்மாடு மாலை தாண்டும் நிகழ்வு
தேவராட்டம், ஒயிலாட்டம்மாடு மாலை தாண்டும் நிகழ்வுகுளித்தலை:குளித்தலை அடுத்த, அய்யர்மலை ரத்தினகிரிஸ்வரர் கோவில் மலை அடிவாரத்தில், பொங்கல் திருநாளையொட்டி ஆண்டுதோறும் மாட்டு பொங்கல் முடிந்த மறுநாள், அய்யர்மலை அடிவாரத்தில் பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த, கம்பளத்து நாயக்கர்கள் ஒன்று கூடி தேவராட்டம் ஒயிலாட்டம் நடத்தினர்.இதனை தொடர்ந்து, மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை அய்யர்மலையில் நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டு கண்டுகளித்தனர்.